தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

தெங்குச் செய்கையை பராமரித்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 10:25 am

Colombo (News 1st) தெங்குச் செய்கையைப் பராமரித்து உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக விவசாயிகளைத் தௌிவூட்டுவதற்கு, தெங்குப் பயிர்ச்செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மீள் தெங்குச் செய்கை மற்றும் புதிய தெங்கசெ் செய்கைக்காக தென்னங்கன்றுகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், தெங்கு செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளை அபிவிருத்தி செய்து, தென்னங்கன்றுகளை நாட்டுதல் மற்றும் பயிர் நிலங்களில் ஈரப்பதனை பாதுகாப்பது தொடர்பில் விவசாயிகளுக்கு தௌிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்