குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை பெரும்பான்மை சமூகம் அடையாளம் காட்ட வேண்டும்: காதர் மஸ்தான்

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை பெரும்பான்மை சமூகம் அடையாளம் காட்ட வேண்டும்: காதர் மஸ்தான்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 9:14 pm

Colombo (News 1st) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று (15) சந்தித்துக் கலந்துரையாடினார்.

குளியாபிட்டி – ஹெட்டிபொல அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இதன்போது தெரிவித்ததாவது,

பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற தீவிரவாதப் போக்குடையவர்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், எவ்வாறு முஸ்லிம்கள் ISIS-ஐ காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இதற்கு சம்பந்தப்பட்டவர்களைக் காட்டிக்கொடுத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க உதவி செய்ய வேண்டும். இந்த கைதுகள் மூலம் இனிமேல் இந்நாட்டில் அனைத்து சமூகமும் இங்கு இருக்கும் பல்லின மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்ற ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்