இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை

இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை

இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 10:25 am

Colombo (News 1st) இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஒயின் மோகனுக்கு (Eoin Morgan) சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்து வீசுவதற்குத் தவறியமையினால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின்போது இங்கிலாந்தின் தலைவர் ஒயின் மோகன் உரிய நேரத்திற்குள் பந்து வீசுவதற்குத் தவறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன்படி, ஒரு போட்டியில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் போட்டிக் கட்டணத்தில் 40 வீதம் அபராதமாக அறவிடப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் வௌ்ளிக்கழமை இடம்பெறவுள்ள நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்றும் இங்கிலாந்து குழாத்திலிருந்து ஒயின் மோகன் நீக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்