அமெரிக்க ஜனாதியால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்

அமெரிக்க ஜனாதியால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்

அமெரிக்க ஜனாதியால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

16 May, 2019 | 9:00 am

Colombo (News 1st) அமெரிக்க கணினி வலையமைப்புக்களை வௌிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வௌிநாட்டுத் தொடர்பாடல்களை உள்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான நிறைவேற்று ஆணையொன்றிலும் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

எனினும், குறித்த நிறுவனங்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனினும், சீன தொடர்பாடல் ஜாம்பவான் என அறியப்படும் நிறுவனமொன்றை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது தொடர்பாடல் சாதனங்களைக் கொண்டு சீனா உளவு பார்க்கக்கூடும் என அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அச்சம் வௌியிட்டிருந்தன.

எனினும், தமது தயாரிப்புக்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் அற்றது என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக ரீதியிலான போர் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்