வட மேல் மாகாணம், கம்பஹாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது 

by Bella Dalima 15-05-2019 | 4:28 PM
Colombo (News 1st) வட மேல் மாகாணத்திலும் கம்பஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று (15) இரவு 7 மணி முதல் நாளை (16) காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அதற்கமைய, கம்பஹா பொலிஸ் பிராந்தியத்தில் கம்பஹா, மினுவாங்கொட, கிரிந்திவெல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரப்பிட்டிய, நிட்டம்புவ, வேயாங்கொட, பல்லேவெல, யக்கல மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதிக்குள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்