நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா. கவலை

by Staff Writer 15-05-2019 | 9:20 AM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் கவலை வௌியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம், அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரிடம் அறிக்கையின் ஊடாகக் கோரியுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் இடம்பெறும் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்படும் கண்டனங்களை வரவேற்பதாகவும் குறித்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அவசரகால சட்டம் அமுலிலுள்ளபோது அனைத்து சமூகங்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளித்து சமூகங்களினதும் தனியாரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம், பாதுகாப்புப் பிரிவினரிடம் குறித்த அறிக்கையினூடாகக் கேட்டுக்கொண்டுள்ளது. வன்முறைகளைத் தோற்றுவிப்பவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.