செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-05-2019 | 6:18 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 02. ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹசொஹொன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 03. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை, இந்தியா மேலும் 5 வருடங்களுக்கு நீடித்துள்ளது. 04. வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 05. வன்முறைகளைத் தவிர்த்து அமைதியான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுமாறு 3 பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 06. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரும் யோசனையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 07. வட மேல் மாகாணத்தின் சில இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 08. கடந்த இரு தினங்களாக முஸ்லிம் மக்களின் வீடுகள், வியாபாரத்தளங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 09. கொச்சிக்கடை தேவாலய தாக்குதல்தாரியின் பெற்றோர் மற்றும் மனைவி ஆகியோர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளனர். 10. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என அடுத்த மாதம் தீர்மானிக்கவுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன அறிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த விமானங்கள் இரண்டு தென் கிழக்கு அலாஸ்காவில் ஒன்றோடொன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 02. அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட்டால் ஈரான் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என, டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ், இலங்கை வளர்முக அணியின் பிரதம பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.