எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினம்

எதிர்வரும் 20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

by Bella Dalima 15-05-2019 | 3:29 PM
Colombo (News 1st) எதிர்வரும் 20 ஆம் திகதி (திங்கட்கிழமை) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பூரணை எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளான சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் வருகின்ற காரணத்தினால், 20 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.