ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி

ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி தெரிவு

by Staff Writer 15-05-2019 | 1:58 PM
Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் பிரகாசித்த வீரர்களைக் கௌரவிப்பதற்கான கிரிக்கெட் விருது வழங்கல் நிகழ்வொன்று இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இதில் ஆண்டின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவாகியுள்ளார். அதேபோன்று, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக இந்தியாவின் ஜெஸ்ப்ரீட் பும்ரா தெரிவாகியுள்ளதோடு, இந்திய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதை, முன்னாள் வீரரான மொஹிந்தர் அமர்நாத் வென்றுள்ளார். இந்தியாவுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொஹிந்தர் அமர்நாத் அதில் 4378 ஓட்டங்களை குவித்துள்ளார். ஆண்டின் அதிசிறந்த டெஸ்ட் வீரராக இந்தியாவின் செட்டிஸ்வர் புஜாரா தெரிவானார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை ரோஹித் சர்மா வெற்றிகொண்டார். சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஏரோன் பின்ச் தனதாக்கியுள்ளார். சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் தெரிவாகியுள்ளார். இதேவேளை, ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருது இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவுக்குக் கிட்டியுள்ளது.