பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

15 May, 2019 | 6:58 am

Colombo (News 1st) வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (15ஆம் திகதி) காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் வட மேல் மாகாணத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நேற்று மாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டதோடு, வட மேல் மாகாணத்தில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் நேற்றிரவு 7 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்