குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

by Staff Writer 15-05-2019 | 3:13 PM
Colombo (News 1st) குளியாப்பிட்டிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு உடன் அமுலாகும் வகையில் சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதற்கிணங்க அவர் களுத்துறை பொலிஸ் கல்லூரியின் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பொலிஸ் அத்தியட்சகராக நுகேகொட பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்