ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ

ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ

ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ

எழுத்தாளர் Staff Writer

15 May, 2019 | 9:34 am

Colombo (News 1st) ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என, அந்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) தெரிவித்துள்ளார்.

ஈரானை ஒரு சாதாரண நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாகவும் எனினும் வரி விதிப்பு தொடர்பில் அந்நாடு முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் வௌியுறவுத்துறை அமைச்சர் சேர்கெய் லாவ்ரோவுடன் (Sergey Lavrov) சோச்சி (Sochi) நகரில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் போர் தொடுக்கப் போவதில்லை என, ஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதொல்லாஹ் அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ஏற்கனவே கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்கா, வளைகுடா நாடுகளுக்கான போர்க் கப்பல்களையும் போர் விமானங்களையும் கடந்தவாரம் நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சிய கடற்பிராந்தியத்தில் 4 எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஈரான் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இதுவரை எந்தவொரு ஆதாரமும் வௌியிடப்படவில்லை என்றபோதிலும், விசாரணைகளுக்காக ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துள்ள சூழலில் ஈரானுடனான போரை எதிர்பார்க்கவில்லை என, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்