விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு

by Staff Writer 14-05-2019 | 12:47 PM
Colombo (News 1st) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை, இந்தியா மேலும் 5 வருடங்களுக்கு நீடித்துள்ளது. 2014ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்கான அறிவித்தலை புதுப்பித்து இந்திய உள்விவகார அமைச்சினால் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய பிரஜைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதால் உடன் அமுலாகும் வகையில் இந்த இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்கச் செய்தமைக்கு இந்திய அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என இணையத்தளங்களினூடாக இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை, இலங்கை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் சில டயஸ்போராக்கள் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் இந்திய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் இந்திய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என இந்திய உள்விவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, 'தி ஹிந்து' செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்