ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை 

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதா என தீர்மானிக்கப்படவுள்ளது

by Staff Writer 14-05-2019 | 4:37 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என அடுத்த மாதம் 4 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அறிவித்துள்ளார். பிரதிவாதிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக செயற்பட்ட 2010 - 2015 காலப்பகுதியில் சதொச ஊழியர்கள் 153 பேரை அவர்களது பணிகளிலிருந்து நீக்கி, அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் செயற்பிரிவு பணிப்பாளர் மொஹிதீன் காஜா மொஹமட் சாகார் ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.

ஏனைய செய்திகள்