by Bella Dalima 14-05-2019 | 6:22 PM
சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த விமானங்கள் இரண்டு தென் கிழக்கு அலாஸ்காவில் ஒன்றோடொன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
11 பேருடன் பயணித்த ஒரு விமானமும் 5 பேருடன் பயணித்த மற்றொரு விமானமும் தென் கிழக்கு அலாஸ்காவின் கெட்சிகன் என்னுமிடத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
11 பேருடன் பயணித்த விமானத்தில் உயிர் பிழைத்த 10 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றொரு விமானத்தில் பயணித்த ஐவரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த நான்காவது நபர் எந்த விமானத்தில் பயணித்தவர் என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
கடல் சார்ந்த பகுதிகளில் பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த இரண்டு விமானங்களுமே ராயல் பிரின்சஸ் எனும் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானவை என BBC செய்தி வௌியிட்டுள்ளது.