அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் சீனா

அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் சீனா

by Staff Writer 14-05-2019 | 9:52 AM
Colombo (News 1st) சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, அமெரிக்க பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி விதிக்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் மேலும் விரிவடைந்துள்ளது. 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரியை இரட்டிப்பாக்கி 3 நாட்களின் பின்னர் சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது. இதேவேளை, தமது இறக்குமதிகள் மீதான வரியை அதிகரிக்க வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவை எச்சரித்திருந்தார். இந்தநிலையில், அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என, சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் யேங் ஷுவாங் கூறியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்ற அண்மைய வர்த்தகக் கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.