வட மேல் மாகாண அரச நிறுவனங்களுக்கு விடுமுறை

வட மேல் மாகாண அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

by Staff Writer 14-05-2019 | 10:59 AM
Colombo (News 1st) வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று (14ஆம் திகதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். தொழிலுக்கு செல்வதற்கு அரச அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வருகை தராமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு அரச அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் வட மேல் மாகாண ஆளுநர் கூறியுள்ளார். வட மேல் மாகாணத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வட மேல் மாகாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.