by Staff Writer 14-05-2019 | 11:21 AM
Colombo (News 1st) ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹசொஹொன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பகுதியில் அமித் வீரசிங்கவும் வறக்காபொல பகுதியில் நாமல் குமாரவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.