இலங்கை வளர்முக அணியின் பிரதம பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமனம்

இலங்கை வளர்முக அணியின் பிரதம பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமனம்

இலங்கை வளர்முக அணியின் பிரதம பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2019 | 10:40 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ், இலங்கை வளர்முக அணியின் பிரதம பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பொறுப்பை வகித்த அவிஷ்க குணவர்தனவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்ததை அடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வளர்முக அணி அடுத்த மாதம் தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், அந்தத் தொடரிலிருந்து சமிந்த வாஸ் பிரதம பயிற்றுநராக செயற்படவுள்ளார்.

அதனைத் தவிர 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராகவும் சமிந்த வாஸ் செயற்படுகின்றார்.

15 வருடங்களுக்கு மேல் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள சமிந்த வாஸ், 335 டெஸ்ட் விக்கெட்களையும் 400 சர்வதேச ஒருநாள் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக செயற்பட்ட அனுபவமும் சமிந்த வாஸூக்கு உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்