பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக C.D. விக்ரமரத்னவை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அனுமதி

by Staff Writer 13-05-2019 | 5:08 PM
Colombo (News 1st) பதில் பொலிஸ்மா அதிபராக C.D. விக்ரமரத்னவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நியமனத்திற்கான பரிந்துரையை அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியிருந்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று (13ஆம் திகதி) மாலை கூடிய அரசியலமைப்புப் பேரவை குறித்த நியமனத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது.