பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம்

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம்

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2019 | 4:19 pm

Colombo (News 1st) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பும் வரை இந்த நியமனம் அமுலில் காணப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவுக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 27 பேரைக் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றும் சீனாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்