தரம் 01 – 05 வரை வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்

தரம் 01 – 05 வரை வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

13 May, 2019 | 8:15 am

Colombo (News 1st) தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (13ஆம் திகதி) ஆரம்பமாகுவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானது.

எனினும், பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது பாடசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை இன்று ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் புலனாய்வு பிரிவினாலோ பாதுகாப்பு தரப்பினாலே உறுதிப்படுத்தபடவில்லை எனவும் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் எவரும் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்