சமூக வலைத்தளங்கள் மீது மீண்டும் தடை

சமூக வலைத்தளங்கள் மீது மீண்டும் தடை

சமூக வலைத்தளங்கள் மீது மீண்டும் தடை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2019 | 8:00 am

Colombo (News 1st) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு மீண்டும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமூக அமைதியைப் பாதுகாக்கும் நோக்கிலும் பிழையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படாமல் தடுக்கும் நோக்கிலும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூகவலைத்தளம் ஒன்றில் பரப்பட்ட பிரசாரம் காரணமாக சிலாபத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்