அதிக வெப்பம் நிலவும் பகுதிகள்

அதிக வெப்பம் நிலவும் பகுதிகள்

அதிக வெப்பம் நிலவும் பகுதிகள்

எழுத்தாளர் Fazlullah Mubarak

13 May, 2019 | 8:18 am

வட மாகாணத்தின் சில மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் 9 மாவட்டங்களிலும் வட மத்திய மாகாணத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தின் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், வெப்பமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் அதிகமாக நீரை பருகுமாறும் நிழலான இடங்களில் இளைப்பாறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்