விபத்துக்குள்ளான 10 மீனவர்கள் மீட்பு

விபத்துக்குள்ளான 10 மீனவர்கள் மீட்பு

by Staff Writer 12-05-2019 | 11:21 AM
Colombo (News 1st) தென் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான 10 மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அம்பலாங்கொட கடற்பிராந்தியத்திலேயே குறித்த 10 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் காலி கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.