by Staff Writer 12-05-2019 | 1:18 PM
Colombo (News 1st) தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (13ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளன.
அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை வளாகங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் பெற்றோர் அச்சமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.