by Staff Writer 12-05-2019 | 12:59 PM
சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பில், சிலாபம் நகரில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து, சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் முறுகல் நிலையை தோற்றுவிக்கும் வகையில் கருத்தினை பதிவிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குளியாப்பிட்டிய , பிங்கிரிய, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் நேற்றிரவு முதல் இன்று காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.