சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-05-2019 | 6:32 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பயங்கரவாதத் தாக்குதல்களினால் நான் பின்வாங்கப்போவதில்லை எனவும் அச்சமடையப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 02. மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 03. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. 04. நாட்டை வந்தடைந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மௌலவி, 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 05. அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தம்வசம் வைத்திருப்போர், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அறிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 06. அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால், பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 07. இன, மத, அரசியல் என பல பிரிவுகளால் பேதம் கண்டுகொள்ளாமல், பயங்கரவாதத்தை அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 08. வத்தளை – ஹுணுபிட்டிய பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் மீது கடற்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குநரைக் கொலைசெய்த குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 02. இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியான கோலன் ஹைட்ஸில் 8 கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை கிரிக்கெட் யாப்பிற்கு முரணாக கிரிக்கெட் நிறுவனம் இன்று அவசரமாக பொதுச்சபைக் கூட்டத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.