கொட்டாவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கொட்டாவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 12-05-2019 | 10:30 AM
Colombo (News 1st) கொட்டாவ - மஹல்வராவ பகுதியில் இன்று (12ஆம் திகதி) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜீப் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த ஐவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மீகொட பனாலுவ பகுதியை சேர்ந்த 33 மற்றும் 36 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.