பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பில் ஆய்வு

குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பில் ஆய்வு

by Staff Writer 12-05-2019 | 7:27 AM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், அவர்களின் உளநலத்தை மேம்படுத்துவற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர் எச். எம். அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகைள முன்னெடுக்கவுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோர் மற்றும் பொறுப்பாளர்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள குழந்தைகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், குறித்த குழந்தைகள் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அந்தவகையில், 011 2444444 , 0112 337039 மற்றும் 011 2337041 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.