இந்திய தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

இந்திய மக்களவைத் தேர்தல்: 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

by Staff Writer 12-05-2019 | 7:48 AM
Colombo (News 1st) இந்திய மக்களவைக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, 59 மக்களவைத் தொகுதிகளில் இன்றைய தினம் நடைபெறுகின்றது. உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீஹார், ஹரியானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களிலும் டெல்லி யூனியன் பிரதேசத்திலும் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளிலேயே வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது. இன்றைய தேர்தலில் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பதற்றம் நிலவக்கூடிய வாக்களிப்பு நிலையங்கள் கண்டறியப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய 6 ஆம் கட்ட வாக்கெடுப்பில், 10 கோடியே 17 இலட்சத்து 82,472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய 6ஆம் கட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதனிடையே இறுதியானதும் 7ஆவதுமான கட்டத்தேர்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், வாக்கெண்ணிக்கை 23 ஆம் திகதி இடம்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.