சர்வதேச அன்னையர்தினம் இன்று

சர்வதேச அன்னையர்தினம் இன்று

சர்வதேச அன்னையர்தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

12 May, 2019 | 7:20 am

Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் இன்று (12ஆம் திகதி) சர்வதேச அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பத்து மாதம் சுமந்து பாலூட்டி வளர்த்து சமூகத்தில் வாழ நமக்கென ஓர் அடையாளம் தந்த அன்னையரை மீண்டும் போற்றுவதில் பெருமை கொள்கிறது நியூஸ்பெஸ்ட்!

பிள்ளை எத்தனை வயதைக் கடந்தாலும், தனக்கு குழந்தை தான் என்பாள். எத்தனை தவறுகள் செய்தாலும் தன் குழந்தை தனக்கு தங்கம் தான் என்பாள்!

இன்றைய நாளின் ஒரு நிமிடம். அமைதியான இடத்தில் அமருங்கள். தூய காற்றை சுவாசியுங்கள். இப்பொழுது கண்களை மூடுங்கள். அன்னை உங்களை பெற்றெடுத்த தருணம். உங்கள் கைகளை பிடித்து நடை பழக்கிய அந்த சித்திரக்கதை. பால் தந்த மார்பின் வலி. ஆதரவற்று அழுதபோது அவள் தந்த அரவணைப்பு. நம்பிக்கை. இவற்றையெல்லாம் நினையுங்கள்…

மீண்டும் ஒரு கணம் அவள் மடியில் உறங்கிட உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அழகாய் அமையுமானால், நீங்கள் நூறு வீதம் அதிர்ஷ்டசாலியே!

அன்னை அளப்பரியவள்! அன்பானவள்! ஆயிரம் உறவுகளை பெற வழிவகுத்தவள். உங்கள் இந்த நிமிட சந்தோஷத்தின் ஆணிவேரே அவள் தான்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்