ஹொரம்பாவ பள்ளிவாசல் மீது தாக்குதல்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

ஹொரம்பாவ பள்ளிவாசல் மீது தாக்குதல்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 May, 2019 | 3:23 pm

Colombo (News 1st) குருநாகல் – நாரம்மலை, ஹொரம்பாவ ஜாமிய ஜூம்மா பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹொரம்பாவ பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலராலேயே பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் முன் பக்கம் உள்ள கண்ணாடியை உடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்