English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
11 May, 2019 | 5:59 pm
அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனரைக் கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் Dallas, Mission: Impossible, Mannix, Hawaii Five-O போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் இயக்குனராக பணிபுரிந்தவர் Barry Crane (57).
இவர் 1985 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். வேலைக்காரர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
மருத்துவப் பரிசோதனையில், பெரிய பீங்கான் பொருள் கொண்டு தாக்கப்பட்டு Barry Crane உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், குற்றவாளி யார் என கடந்த மார்ச் மாதம் வரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில், அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தனிப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பரிசோதித்துள்ளனர். இதன்போது, குற்றவாளி குறித்த விபரம் தெரியவந்துள்ளது.
Barry Crane-ஐ கொலை செய்தவர் வடக்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த Edward Jerry Hiatt (52) என கண்டறியப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முன்விரோதமே கொலைக்கு காரணம் என எட்வர்ட் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலையின் பின்னர் Barry Crane-இன் கார் திருடப்பட்டிருந்தது. அக்காரில் Edward Jerry Hiatt-இன் கைரேகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொலை இடம்பெற்ற பகுதியில் இருந்து பெறப்பட்டவற்றை கடந்த ஆண்டு மீண்டும் DNA பரிசோதனைக்கு உட்படுத்திய போதே கொலையாளி அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
05 May, 2022 | 12:57 PM
12 Apr, 2022 | 09:17 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS