காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 May, 2019 | 4:03 pm

Colombo (News 1st) ஃபொனி சூறாவளியின் போது காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ‘ராஜா – 02’ எனும் படகில் சென்ற 7 மீனவர்களே காணாமற்போயிருந்தனர்.

கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஃபொனி சூறாவளி தாக்கத்தினால் கடந்த 30 ஆம் திகதி அவர்கள் காணாமற்போயிருந்தனர்.

காணாமற்போனவர்களை ‘சம்பா – 07’ என்ற படகில் சென்றவர்கள் கண்டுபிடித்து, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்