நுவன் சொய்சா, அவிஷ்க குணவர்தனவிற்கு தடை

நுவன் சொய்சா, அவிஷ்க குணவர்தனவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் நிறுவனத்தால் தடை

by Staff Writer 10-05-2019 | 4:46 PM
Colombo (News 1st) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான நுவன் சொய்சா மற்றும் அவிஷ்க குணவர்தனவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் நிறுவனத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் நிறுவனத்தின் ஒழுங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிரிக்கெட் நிறுவனத்திற்கு பதிலாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. கடந்த வருடத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 லீக் கிரிக்கெட் போட்டிகளின் போதே, நுவன் சொய்சா மற்றும் அவிஷ்க குணவர்தன விதிமுறைகளை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. நுவன் சொய்சாவுக்கு எதிராக 4 விடயங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவிஷ்க குணவர்தனவிற்கு எதிராக 2 விடயங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.