சட்ட மா அதிபரானார் தப்புல டி லிவேரா

தப்புல டி லிவேரா புதிய சட்ட மா அதிபராக பதவிப்பிரமாணம்

by Staff Writer 10-05-2019 | 4:26 PM
Colombo (News 1st) பதில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா புதிய சட்ட மா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் புதிய செயலாளராக எச்.எம். காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜி. அசோக்கா அலவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்குமான நியமனக்கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.