ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 160 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்

ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 160 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்

ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 160 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்

எழுத்தாளர் Staff Writer

10 May, 2019 | 4:53 pm

Colombo (News 1st) ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 160 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதனடிப்படையில், பாதுகாப்பு பிரிவுக்கு 160 உத்தியோகத்தர்களுடன் மேலும் 50 பெண் உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது ரயில்வே திணைக்களத்தில் 600 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்