பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் திகதி குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிப்பர் 

பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் திகதி குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிப்பர் 

பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் திகதி குறித்து துணைவேந்தர்கள் தீர்மானிப்பர் 

எழுத்தாளர் Staff Writer

10 May, 2019 | 4:18 pm

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்கும் திகதி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 13 ஆம் திகதிக்கு பின்னர், எந்தவொரு திகதியிலும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு குறித்து துணைவேந்தர்கள் திருப்தியடைந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களை திறக்க முடியும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பொறியியலாளர், முகாமைத்துவம், வர்த்தகம் ஆகிய பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்