புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-05-2019 | 6:36 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. 02. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 03. சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களின் காட்சிகளை உபயோகித்து சில விசமிகளால் சமூகவலைத்தளங்களில் அண்மைக்காலமாக விசமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 04. சரத் என் சில்வாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்திலிருந்து பிரசன்ன ஜயவர்தன விலகியுள்ளார். 05. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 06. வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 48 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 07. கைது செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 08. இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 09. ரயில் பயணிகளின் பயணப்பொதிகளில் வெடிபொருட்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் சோதனையிடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட மோப்பநாய்களை ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 10. நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. குவாத்தமாலாவில் (Guatemala) சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 02. துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விமர்சனம் வௌியிட்டுள்ளனர்.