ராஜிவ் காந்தி கொலை: எழுவரின் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ராஜிவ் காந்தி கொலை: எழுவரின் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ராஜிவ் காந்தி கொலை: எழுவரின் விடுதலைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

எழுத்தாளர் Bella Dalima

09 May, 2019 | 4:05 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இந்திய உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே தீர்மானம் எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு பரிந்துரை செய்து அந்த தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

எனினும், ஆளுநர் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால், எழுவரின் விடுதலை காலதாமதமாவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், ராஜிவ் காந்தியின் கொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குறித்த ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதால், அவரே முடிவெடுப்பார் என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர், குடியரசு தலைவர்களின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்குட்பட்டது எனவும் அதற்குள் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்