Colombo (News 1st) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் தற்போது வாதப்பிரதிவாதம் ஏற்பட்டுள்ளது.
எவராவது ஒரு சிலர் வௌிநாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு, பின்னர் மீண்டும் நாட்டிற்கு வந்தால், இல்லாவிட்டால் வௌிநாட்டுப் போராட்டங்களுடன் தொடர்புபட்டு இலங்கைக்கு வருகை தந்தால், இலங்கையின் சட்டங்களுக்கு அமைய அது தவறு இல்லையென பிரதமர் தெரிவித்துள்ளார்.
எவராவது யுத்தத்தை அறிவித்தால், அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களை சிறையில் அடைக்க முடியும் என தண்டனைச் சட்டத்தின் 121 ஆவது சரத்தில் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை நேற்று (07) செய்தி வௌியிட்டிருந்தது.
தண்டனைச் சட்டத்தின் 114 ஆவது சரத்திற்கு ஏற்ப, அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபடுதல் அல்லது உதவி வழங்கலுக்கான தண்டனை 121 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சிரியாவிற்கு சென்ற சிலர் அங்கு ISIS அமைப்புடன் செயற்பட்டு மீண்டும் இலங்கைக்கு வந்தால், அவர்களைக் கைது செய்வதற்கான சட்டங்கள் இலங்கையில் இல்லையென பிரதமர் வௌிநாட்டு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தெரிவித்திருப்பதாவது,
டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியான முதலாவது அறிக்கை தொடர்பில் நான் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன். தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சிரியா, அமெரிக்கா, துருக்கி மற்றும் ஈரானுக்கு இடையில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. அதனால் அவர்கள் இதில் தலையிட்டுள்ளனர். எமக்கும் அவ்வாறான நிலமையை எதிர்கொள்ள முடியாது. தற்போது எமக்குள்ள பிரச்சினை, எம்முடன் தொடர்புபட்டுள்ள வௌிநாட்டு சக்திகளாகும். அது பாராளுமன்றத்தில், கேட்க முடியுமான கேள்வியாகும். எனினும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் மூன்றாம் சரத்தின் படி மக்கள் அச்சமடையும் போது, அவர்களை நாட்டிக்குக் கொண்டுவர முடியும். சரத்தின் இரண்டாவது உப பிரிவிற்கு ஏற்ப இலங்கைக்கு வௌியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட எந்தவொரு நபர் தொடர்பிலும் கவனம் செலுத்த முடியும். தண்டனைச் சட்டத்தில் இந்தப் பிரிவை நாம் இங்கிலாந்தில் இருந்தே பெற்றுக்கொண்டோம்.