துருக்கிய தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம்

துருக்கியில் தேர்தல் மீண்டும் நடத்தப்படுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம்

by Staff Writer 08-05-2019 | 9:02 AM
Colombo (News 1st) துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விமர்சனம் வௌியிட்டுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் துருக்கி தேர்தல்கள் ஆணையகம் தாமதமின்றி விளக்கமளிக்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இதனிடையே, துருக்கியின் இந்தத் தீர்மானத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என ஜேர்மனிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (Heico Mass) கூறியுள்ளார். துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி நடைபெற்றது. 57 மில்லியன் மக்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்ததுடன் தேர்லின் முடிவுகள் நள்ளிரவில் வௌியாகின. தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகனை முக்கிய நகரங்களுட்பட பல இடங்களில் அந்நாட்டு எதிர்க்கட்சி வெற்றிபெற்ற நிலையில், தேர்தலில் குளறுபடிகள் இடம்பெற்றதாகத் அந்நாட்டு ஜனாதிபதியின் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்தை அடுத்து முக்கிய நகரான அங்காராவில் எதர்வரும் 23 ஆம் திகதி மறு தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.