விமானப்படை சீருடையை ஒத்த 1116 ஆடைகள் கைப்பற்றப்பட்டன

by Staff Writer 08-05-2019 | 9:22 PM
Colombo (News 1st) லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட விமானப்படை சீருடையை ஒத்த ஒரு தொகை ஆடைகள் கட்டுநாயக்க - முதுவாடிய பகுதி வீதித்தடையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. சீதுவை பொலிஸார் மற்றும் விமானப்படை இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, விமானப்படை சீருடையை ஒத்த 1116 ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன. வலப்பனையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு இதனைக் கொண்டு செல்வதாக லொறியின் சாரதியும் உதவியாளரும் தெரிவித்துள்ளனர். ஆடை தொடர்பிலான உரிய ஆவணங்கள் இல்லாமையினால் சாரதியையும் உதவியாளரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.​