பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது

பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 May, 2019 | 11:10 am

Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஹொரவப்பொத்தானை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, குறித்த சந்தேகநபர் இன்று (8ஆம் திகதி) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவப்பொத்தானை – முக்கரகமவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர் கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்