லண்டனில் இடம்பெற்ற எமி ஜாக்சன் – ஜோர்ஜின் நிச்சயதார்த்தம்

லண்டனில் இடம்பெற்ற எமி ஜாக்சன் – ஜோர்ஜின் நிச்சயதார்த்தம்

லண்டனில் இடம்பெற்ற எமி ஜாக்சன் – ஜோர்ஜின் நிச்சயதார்த்தம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 May, 2019 | 12:50 pm

Colombo (News 1st) நடிகை எமி ஜாக்சனின் நிச்சயதார்த்தம் நேற்று (6ஆம் திகதி) லண்டனில் இடம்பெற்றுள்ளது.

மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிய எமி ஜாக்சன், தொடர்ந்து தாண்டவம், தெறி மற்றும் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில், எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த செல்வந்தரான ஜோர்ஜ் (George Panayiotou) என்பவரை காதலித்து வருவதாக தனது இன்ஸ்டகிராம் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தான் கர்ப்பமாகியுள்ளதான செய்தியை வௌியிட்டு, கடந்த மார்ச் மாதம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்திருந்தார்.

இந்தநிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று லண்டனில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, இன்று எமது நிச்சயதார்த்தத்தைக் கொண்டாடுகின்றதாகவும் இது எமது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் எனவும் கூறிய எமி, இந்நாளை சிறப்பாக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்