பாடசாலையின் பின்னரான விளையாட்டுப் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பாடசாலையின் பின்னரான விளையாட்டுப் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

07 May, 2019 | 7:21 am

Colombo (News 1st) பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எம்.எம். ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 6ஆம் தரத்திற்கு மேலுள்ள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வருகை நூற்றுக்கு 5 வீதமாக காணப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்