துருக்கியில் மீண்டும் தேர்தல்?

துருக்கியில் மீண்டும் தேர்தல்?

துருக்கியில் மீண்டும் தேர்தல்?

எழுத்தாளர் Staff Writer

07 May, 2019 | 10:31 am

Colombo (News 1st) துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்றது.

57 மில்லியன் மக்கள் இந்தத் தேர்தல்களில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றிருந்ததுடன் தேர்லின் முடிவுகள் நள்ளிரவில் வௌியாகின.

தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தயீப் எர்டோகனை முக்கிய நகரங்கள் உட்பட பல இடங்களில் அந்நாட்டு எதிர்க்கட்சி வெற்றி கொண்டிருந்தது.

இந்நிலையில், தேர்தலில் குளறுபடிகள் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து முக்கிய நகரான அங்காராவில் எதிர்வரும் 23 ஆம் திகதி மறு தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறு தேர்தல் என்பது தயீப் எர்டோகனின் கட்சிக்கு எதிரான வெற்றி சட்டவிரோதமானது என்பதை சுட்டிநிற்பதாக ஜனநாயக மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் இது ‘வெற்று சர்வாதிகாரம்’ என ஜனநாயக மக்கள் கட்சியின் பிரதித் தலைவர் Onursal Adiguzel டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்