கோட்டாபய சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி

கோட்டாபய சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி

கோட்டாபய சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

07 May, 2019 | 4:19 pm

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மருத்துவ பரிசோதனைகளுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை சிங்கப்பூருக்கு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மெதமுல்லன பகுதியில் D.A. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணத்தின் போது அரசிற்கு சொந்தமான 3 கோடியே 39 இலட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் குற்றச்சாட்டுகள் இணைக்கப்பட்டுள்ள விதம் என்பன தொடர்பில் பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பை மூவரடங்கிய விசேட நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்