விவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்

அரிசி களஞ்சியசாலைகளை விவசாய வலயங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை

by Staff Writer 07-05-2019 | 2:20 PM
Colombo (News 1st) சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி களஞ்சியசாலைகளை நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலயங்களில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய சந்தையில் அரிசி விற்பனையில் போட்டித்தன்மையை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நுகர்வோருக்கு போசாக்கான அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.